2025-ம் ஆண்டு நிறுத்தப்படும் விண்டோஸ் 10 இயக்கமுறைமை- Next for Windows

2025 ஆம் ஆண்டில் விண்டோஸ் 10 இயக்க முறைமையை (Windows 10 Operating System) நிறுத்தப் போவதாக மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினிகளில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த இயக்க முறைமை என்னவாகும்?

நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட விண்டோஸ் லைஃப் சைக்கிள் ஃபேஸ் ஷீட் (Windows 10 is a major release of the Windows NT operating system developed by Microsoft) இத்தகவலை தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 ஹோம் (Windows 10 Home), புரோ (Pro), புரோ ஃபார் வொர்க்ஸ்டேஷன் (Pro for Workstations), புரோ எஜுகேஷன் (Pro Education) ஆகிய இயக்க முறைமைகள், 2025ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு மேற்கண்ட இயக்கமுறைமைகளில் புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வெளியிடப்படாது என்பது இதன்மூலம் தெரியவருகிறது.

நெக்ஸ்ட் ஃபார் விண்டோஸ் (Next for Windows)

விண்டோஸ் 10 ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியபோது, இது விண்டோஸின் இயக்க முறாமையின் கடைசி பதிப்பாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிறுவனத்தின் சமீபத்தில் பெயியான டீஸர் இந்த மாத இறுதிக்குள் விண்டோஸ் 11 ஐ அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தனது இணையதளத்தில் ஜூன் 24 அன்று ஒரு புதிய நிகழ்வை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது, அந்த நிகழ்வில், "நெக்ஸ்ட் ஃபார் விண்டோஸ்" ('Next for Windows') என்ற பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இச்சொல் எதிர்வரபோகும் அனைத்து மாற்றங்களையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த நிகழ்வு ஜூன் 24ஆம் தேதியன்று IST 8:30 மணிக்கு நடைபெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, அடுத்த தலைமுறை விண்டோஸ் புதுப்பிப்பு கடந்த தசாப்தத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று மைக்ரோசாப்ட் பில்ட் 2021 (Microsoft Build 2021) என்ற நிகழ்வில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

2025 ஆண்டுடன் விண்டோஸ் 10 முடிவுக்கு வந்துவிடும் என்றாலும், பயனாளர்கள் தங்களின் விண்டோஸ் 7 இலிருந்து தங்கள் கணினியை மேம்படுத்த நீண்ட காலம் எடுக்கும். புதிய இயக்கமுறைமைக்கு மாறுவதற்காக மைக்ரோசாப்ட் மக்களுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.