2022-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையுமா?

நடப்பாண்டில், இந்தியாவிலுள்ள ஸ்டார்டப் நிறுவனங்களில் குறைந்தது 50 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், 'யுனிகார்ன்' அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும், குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாவது, 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும் என்றும் சமீபத்தில் வெளியான ஆலோசனை நிறுவனமான பி.டபுள்யு.சி. (PWC) , இந்தியா வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு நிறுவனத்தின் 7,400 கோடி ரூபாய் சந்தை மதிப்பை  தாண்டும் போது அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றதாக கருதப்படும். இந்தியாவில் நடப்பாண்டில், கிட்டத்தட்ட 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டின் இறுதியில் 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் 100 தாண்ட வாய்ப்புள்ளதாக  , ஆலோசனை நிறுவனமான பி.டபுள்யு.சி., இந்தியா, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து  மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஆண்டில் உருவாகி உள்ளன, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத ஏராளமான நிறுவனங்களின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு கடைசியில் 68 நிறுவனங்கள் யுனிகார்ன் மதிப்பை எட்டியுள்ளன., இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கடந்த அக்., - டிச., காலாண்டில் மட்டும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெங்களூரு மற்றும் டில்லி தலைநகரை தலைமையாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்தியாவின் ஸ்டார்டப் நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் நான்கில் மூன்று பகுதி முதலீடுகளை ஈர்த்துள்ளன என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.