ஹோஸ்டிங் என்றால் என்ன ? What is meant by Web Hosting?

வெப் ஹோஸ்டிங் Web hosting

நாம் நம்மிடம் உள்ள பொருட்களை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அதேபோல்தான் ஆன்லைனில் நம்முடைய கோப்புகள், புகைப்படங்கள் என அனைத்துவகை தரவுகளையும் பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை, அதற்குப் பெயர்தான் வெப் ஹோஸ்டிங் .

ஹோஸ்டிங் வேலை செய்யும் விதம்?

வெப் சர்வர் (Web server) என்பது online-ல் தரவுதளை சேமிக்கப் பயன்படும் ஒரு உயரிய கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். இந்த சாதனத்தில் நமக்கான இடத்தை பயன்படுத்துவதே வெப் ஹோஸ்டிங். எடுத்துக்காட்டாக நாம் நமது கணிணியில் Hard Disk-ஐ சில Drive-களாக பயன்படுத்துவது போன்றது. அதாவது இங்கு Hard Disk என்பது Web Server. அதை Drive-களாக பிரிப்பது Web Hosting . அதிலுள்ள கோப்புகள் நமது இணையதளம், அதிலுள்ள Images, Files, Documents அனைத்தும் நமது இணையப்பக்கங்கள் மற்றும் அவற்றிலுள்ள தரவுகள்.

நமது கணிணியிலுள்ள தகவல்களை நாம் மட்டுமே பார்க்கவும், பயன்டுத்தவும் முடியும். நம் தகவல்களை அனவரிடமும் பகிர்வதற்கு பயன்படுபவையே வலைதளப்பக்கங்கள். இந்த வலைத்தள பக்கங்களை சேமிக்க பயன்படுபவையே வெப் சர்வர்.

எடுத்துக்காட்டாக யாரேனும் அவர்களின் பிரவுசரில் நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தேடினால் இந்த வெப் சர்வர் அதிலுள்ள டேட்டாக்களை, யார் தேடுகிறார்களோ அவர்களின் வேண்டுகோளை ஏற்று உங்களுடைய இணைய பக்கத்தின் நகலை பெற்று வாடிக்கையாளர் கணினியில் உங்களுடைய வலைதளமாக திறக்க வழிவகை செய்கிறது.

வெப் ஹோஸ்டிங் வகைகள் Types of Web Hosting

பொதுவாக மூன்று ஹோஸ்டிங் வகைகளாக உள்ளன.
அவை,
1. Shared Server Hosting (or) Shared Hosting- பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங்
2. Virtual Private Server Hosting (or) VPS Hosting விர்ச்சுவல் பிரைவேட் சர்வர்
3. Dedicated Server Hosting (or) Dedicated Hosting- அர்ப்பணிக்கப்பட்ட சர்வர்

ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒவ்வொரு வகையான தேவை இருக்கும். சில வலைதளத்திற்கு அதிகமான சேமிப்பு பகுதி இருக்க வேண்டும், சிலவற்றிற்கு பார்வையாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு அதிக தரவுகளை சேமித்து சேவை வழங்க அதிக சேமிப்பு இடம் இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு சாதாரண தேவைகள் இருக்கும். இவ்வாறாக நமக்கான தேவைகளைப் பொறுத்து ஹோஸ்டிங் வகையை தேர்வு செய்ய வேண்டும்

இனி ஒவ்வொரு ஹோஸ்டிங் பற்றிய விளக்கங்களையும் விரிவாக பார்ப்போம்.

1. Shared Server Hosting (or) Shared Hosting- பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங்

இப்பொழுது நாம் கல்லூரி விடுதியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த விடுதியில் உள்ள இறையில் நம்முடன் பல பேர் தங்கி இருப்பார்கள். அதாவது நாம் இருக்கும் ஒரே அறையை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிருக்கும். அதுபோலவே இந்த shared hosting -ல் நாம் பயன்படுத்தும் அதே வெப் சர்வரை நம்மோடு பல இணையதளங்கள் பகிர்ந்துக்கொள்ளும்.

எனவே இதனை பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் என்று அழைப்பர். இதில் இருக்கும் சேவையகம் அதாவது மெமரி, CPU, RAM , ஆகிய அனைத்து சேவைகளையும் நம்முடன் பல இணையதளங்கள் பகிர்ந்துக்கொள்ளும். எனவே இதன் விலையும் மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

ஆனால் நாம் இந்த வகையான பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் ஐ பயன்படுத்தி பெரிய வலைதளம் அமைக்க முடியாது. உதாரணமாக ஆன்லைன் வர்த்தக இணையதளங்கள், வங்கிகிகளின் இணையதளங்கள், அதிக தரவுகளை பயன்படுத்தும் வலைதளங்கள் போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்த முடியாது ஏனெனில் பலரும் நம்முடன் சர்வரை பகிர்ந்து கொள்கின்ற காரணத்திணால் இதனுடைய பாதுகாப்பு மிகவும் குறைவு, மேலும் நமது வலைத்தளத்திற்கு பார்வையாளர்கள் அதிகமாக வர வர இதனுடைய வேகம் சற்று குறைந்தும் காணப்படும்.

சாதாரன தொழில்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான நிலையான வலைத்தளங்கள் அமைப்பதற்கு இந்தவகை ஹோஸ்டிங்-ஐ பயன்படுத்தலாம்.

2. Virtual Private Server Hosting (or) VPS Hosting விர்ச்சுவல் பிரைவேட் சர்வர்

இந்த வகை ஹோஸ்டிங் என்பது மிகப்பெரிய குடியிருப்பில் உள்ள நம்முடைய தனிப்பட்ட வாடகை வீடு போன்றது. இந்த வீட்டில் நாம் மற்றும் நமக்கு தெரிந்த மற்றும் மிக முக்கியமான நபர்கள் மட்டுமே இருப்பர். இவ்வீட்டில் நமக்கு சம உரிமை மற்றும் சிறந்த பாதுகாப்பு இருக்கும்.

அதேபோலதான் இந்த Virtual private server -ம். இந்த வகை விர்ட்சுவல் பிரைவேட் சர்வர் virtualization என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.


அதாவது ஒரு சர்வர் பல சர்வர்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். அந்த சர்வரில் நமக்கென்று ஒரு தனி இடம் கொடுக்கப்படும். நமக்கான அந்த தனி சர்வரில் அதிகப்படியான தரவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அதாவது அதிக சேமிப்பு பகுதி (Web space) இருக்கும்.

இந்தவகை சர்வரில் நமக்கான தனி இடம் கிடைப்பது மட்டுமல்லாமல் பாதுகாப்பு போன்ற அதிகப்படியான நன்மைகளையும் கிடைக்கும்.

3. Dedicated Server Hosting (or) Dedicated Hosting- அர்ப்பணிக்கப்பட்ட சர்வர்

இந்த டெடிகேடட் சர்வர் ஹோஸ்டிங் (Dedicated Server Hosting) என்பது நாம் நமது சொந்த வீட்டில் வாழும் ஒரு வாழ்க்கை போன்றது, இந்த வீட்டில் நாம்தான் ராஜா, இந்த வீடு முழுவதும் நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். மேஇவ்வீட்டின் பராமரிப்புச் செலவுகள் உட்பட அனைத்துவகை செலவுகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த வகை சர்வரில் நம்முடன் யாரும் பகிர்ந்து கொள்ள இயலாது. இது நமக்கான தனிப்பட்ட இடம். மேலும் இது நமக்கு ஒரு முழுமையான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை கொடுக்கிறது.

இந்த வகை dedicated hosting சர்வரில் நம்முடைய வலைத்தளத்தின் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும்.

உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் உயரிய வலைதளங்களான அமேசான், Flipkart, Google மற்றும் அதிக டேட்டாக்களை பயன்படுத்தும் மற்றும் பாதுகாப்பான வங்கிகளின் வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து வலைத்தளங்களும் இந்த வகை ஹோஸ்டிங் ஐ தான் பயன்படுத்துகின்றன.

இந்த வகை ஹோஸ்டிங் ல் செயல்படும் வலைத்தளங்கள் அனைத்தும் மிக வேகமாக தகவல்களை தருபவைகளாக இருக்கும், மேலும் கோடிக்கணக்கான வலைத்தள பார்வையாளர்கள் நமது இணையதளத்தை பயன்படுத்தினாலும் வேகத்தில் சற்றும் குறைவிருக்காது, மேலும் மிகவும் பாதுகாப்னதாக இருக்கும்.

எனவே நம்முடைய வணிகம் அல்லது தேவை என்ன என்பதை உணர்ந்து நமக்கு ஏற்ற சர்வரை நாம் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.