Domain Name என்றால் என்ன?

Domain Name

Domain Name என்பது நம்முடைய வலைத்தளத்தின் (Website) பெயர் ஆகும். உதாரணமாக entraxy.com இந்த வலைத்தளத்தின் பெயர்.

நமது வலைத்தளத்தின் பெயர் சாதாரணமாக ஐ.பி. முகவரி (IP Address) போல இருக்கும். அவ்வாறு இருக்கும் அனைத்து வலைத்தளங்களின் ஐ.பி. முகவரிகளையும் நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட அம்சம்தான் Domain Name.

உதாரணமாக, நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருடைய Mobile Numbers-ஐ அனவராலும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. அதனால்தான் நாம் நமது Mobile-ல் அவரது பெயர் மூலம் அந்த Number-ஐ சேமித்துக்கொள்வோம் அல்லவா? அது போலவே இதுவும். இங்கு Mobile Number என்பது Unique IP Address. சேமித்து வைக்கும் பெயர் என்பது Domain Name ஆகும்.

நாம் பதிவு செய்து வாங்கும் ஒவ்வொரு Domain Name-ம் அதற்காண தனிப்பட்ட IP Address-டன் இணைக்கப்படும். இந்த செயல்முறையானது Domain Name System அமைப்பு மூலம் செய்யப்படும்.

இவ்வாறு Domain Name System மூலம் Domain Name-ம் அதற்கான தனிப்பட்ட IP Address-டன் இணைக்கப்பட்ட பிறகு நாம் நேரிடையாக Domain Name-ஐ பயன்படுத்தி நமது இணையதளத்தை பயன்படுத்தலாம்.

DNS – Domain Name System

டிஎன்எஸ் (DNS) என்பது "டொமைன் பெயர் அமைப்பு"" (Domain Name System) என்பதைக் குறிக்கிறது. ஒரு வலைத்தளம் சேமிக்கப்பட்டுள்ள சேவையகத்தின் (Web Server) தனிப்பட்ட IP முகவரியுடன் (IP Address) மனிதர்களால் படிக்கக்கூடிய டொமைன் பெயர்களை (எ.கா. entraxy.com ) பொருத்துவதன் மூலம் வலைத்தளங்களுடன் இணைக்க நம்மை அனுமதிக்கும் அமைப்பு டிஎன்எஸ்.