5G Bands என்றால் என்ன? | 5G Bands in India

5G Mobile வாங்க தயாராகும் அனைவருக்கும் எழும் முதல் கேள்வி, அந்த5G Smart Phone-ல் எத்தனை5G Bandsஎன்பதாகதான் இருக்கும். அதற்கு விடை அளிக்கும் நோக்கில் எழுதப்பட்டதே இந்த வலைப்பதிவு.

இந்த 5-ம் தலைமுறை இணையத்திற்காவே இந்தியாவிலுள்ள அனைத்து மொபைல் நொட்வொர்க் நிறுவனங்களும் தற்போது தயாராகி வருகின்றன. கூடிய விரைவில்5G தொழில்நுட்பம்இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் இதற்கான முதற்கட்ட சோதனை முயற்சிகள் துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

5G தொழில்நுட்பம் என்பது உலகளவில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்று கருத்துமில்லை.

இந்த 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, இணைய வேகம் (Network Speed) அதிகமாகவும், தாமதம் (Latency) குறைவாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5G Band-ன் வகைகள் எத்தனை?

5G மட்டுமல்லாமல் அனைத்து தலைமுறை நெட்வொர்க்குகளையும் Bands என்ற பிரிவுகளாக பிரிப்பர்.

அதுபோலவே 5G தொழில்நுட்பத்தையும் மூன்று Band -களாக பிரித்துள்ளனர். உலகளவில் ஏற்கனவே 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் 5G தொழில்நுபத்தை இந்த மூன்று Bands-களாகவே பிரித்து பயன்படுத்தி வருகின்றன.இந்தியாவிலும் இதே மூன்று 5G Bandகளாகவே பிரித்து பயன்படுத்தப்படும்.

மூன்று 5G Bands-கள்:

  • Low Band
  • Mid Band
  • High Band
  • இந்த மூன்று Band-களிலுமே சில நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகள் உள்ளன. இந்த மூன்று Band-களும்Frequency Rangeஎன்ற கணக்கீட்டை பயன்படுத்தியே கணக்கிடப்படுகின்றன. Frequency Range என்பதுMega Hertz, Gega Hertzபோன்றHertzஅலகில் கணக்கிடப்படும்.

    Low Band

    Low Band-ல் ஒரு செல்லுலார் டவர் மூலம் 100 கி.மீ. சுற்றளவிற்கு அலைவரிசை கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் Low Band மூலம் பெறப்படும் இணையதள வேகம் மிக்குறைவாகவே இருக்கும். அதாவதுLow Band-ன் Frequency Range 600- 850 Hz என்ற அளவில் இருக்கும்.

    எவ்வளவு பெரிய வீடுகள், கட்டிடங்கள் இருந்தாலும் அதையும் மீறி 100 கி.மீ. அளவிற்கு Network Coverage கிடைக்கும். Low Band-ல் கிடைக்கும் இணைதள வேகம் என்பது நாம் தற்போது பயன்படுத்தி வரும் இணையதள வேகத்தை விட அதிகமானதாகவே இருக்கும்.

    அதாவது நாம் தற்போது பயன்படுத்தும் இணையத்தின் அதிகபட்ச வேகம் 100 Mbps என்றால் Low Band-ன் தொடக்கநிலை இணைய வேகமே300 Mbpsஎன்ற நிலையில் இருக்கும்.

    Low Band ல் கிடைக்கும் இணையதள வேகம் 4G-ஐ விட அதிகமாகவே இருந்தாலும் 5G-ன் முழுப்பலன்களையும் Low Band மூலம் பெற இயலாது. Mid Band மற்றும் High Band பிரிவுகளின் மூலம் மட்டுமே 5G-ன் முழுப்பலன்கலையும் நம்மால் பெற முடியும்.

    மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு Low Band Frequency Cellular Tower அமைப்பதே சிறந்த வழியாக இருக்கும். ஆகவே இதன் பயன்பாட்டு விலையும் மிகக்குறைவாகவே இருக்கும்.

    High Band

    High Band-ன் Frequency Range 24 GHZ 28 GHZ ஆகும். High Band-ல் இணையதள வேகம் மிக அதிகமாக இருந்தாலும் அதன்Network Coverageஎன்பது மிக குறுகிய சிறிய இடத்திற்கே ஏற்றதாக இருக்கும். அதாவது சிறிய மற்றும் பெறிய நிறுவனங்கள், ஆட்டோமொபைல் போன்ற நிறுவனங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் கண்ணாடிக்கதவு அல்லது சுவரை தாண்டி High Band ன் Network Coverage கிடைக்காது.

    மேலும் High Band-ன் பயன்பாட்டு விலை என்பது Low Band-ஐ ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிக அதிகமாக இருக்கும்.

    Mid Band

    Mid Band-ன் Frequency Range 3GHZ 6GHZ ஆகும். Mid Band ன் வேகம் மற்றும் தாமதம் அனைவருக்கும் எற்ற ஒன்றாக அமையும். இதன் விலைவும் நடுத்தரமாகவே இருக்கும். அதாவது இதன் பயன்பாட்டு விலை என்பது Low Band-ஐ ஒப்பிட்டுப்பார்க்கும் போது சற்று அதிகமாகவும், High Band-ஐ ஒப்பிட்டுப்பார்க்கும் போது சற்று குறைவாகவும் இருக்கும்.

    இந்தியாவில் 5G

    தற்போது இந்தியாவில் 5G பரிசோதனை முயற்சி பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இந்திய தொலைதொடர்பு அமைப்பானTRAI-ஆனதுJio, Airtelமற்றும்Vodafoneஆகிய நிறுவனங்களுக்கு 5G பரிசோதனை உரிமம் வழங்கியுள்ளது.

    இந்த முதற்கட்ட பரிசோதனைக்கு Low Band-க்கு 700 MHz வரையிலும். Mid Band-ற்கு 3500MHz வரையிலும்,High Band-ற்கு 24.25 GHz முதல் 28.5 GHzவரையிலும் சோதனை செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.