உனக்கென ஓர் கவி
சில்லென்ற சிரிப்புடன்,
சட்டெனச் சிட்டுபோல் வந்து செல்லும் உன் சினத்தோடு,
உன்னைப் புரிந்துகொள்ள நான் துணிந்தேன் மெல்ல! மெல்ல!
அன்போடு பேசும்போதும்,
கோபத்துடன் ஏசும்போதும்,
ஒவ்வொரு அழகிய பிம்பத்தை நீ அணிந்து,
அவை அனைத்திலும் பல முத்துகளைச் சுமக்கும் சிப்பியாய்-
உன் பிம்பத்தின் உரைவிடமே நீ.ஆனாய் !
அவைகளின் ரசிகையும் நானானேன்
-சக்தி மீனாட்சி