Intermediary platform சட்ட பாதுகாப்பை இழந்த ட்விட்டர்

மைக்ரோ பிளாக்கிங் தளம்

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால் இந்தியாவில் ஒரு இடைத்தரகராக செயல்படுகின்ற அதன் சட்ட பாதுகாப்பை இழந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டர் இணையதளம் இந்தியாவின் விதிகளை பின்பற்ற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் சமூக ஊடக தளம் மட்டுமே தொடர்ந்து இணங்காமல் இருப்பதாக அரசு கூறுகிறது. ஜூன் 9 அன்று ட்விட்டர் , சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான இந்த்ய அரசின் புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியது.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஒரு நோடல் ஒப்பந்த நபர் (nodal contractual person) மற்றும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரி (Resident Grievance Officer) ஆகியோரை நியமித்துள்ளதாகவும் டிவிட்டர் நிறுவனம் கூறியது. =தலைமை இணக்க அலுவலர் பதவி நியமனத்தை இறுதி செய்வதற்கான இறுதிக் கட்டங்களில் டிவிட்டர் நிறுவனம் இருந்தது

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு இணங்க ட்விட்டருக்கு கடைசி அறிவிப்பை வழங்கியதாக யூனியன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஜூன் 5ஆம் தேதியன்று கூறியது.

சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான மத்திய அரசின் புதிய இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் மே 26 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. டிவிட்டரை தவிர்த்த பிற இந்த.சமூக ஊடக நிறுவனங்களான வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகிய அனைத்து சமூக வலைதளங்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கிய நிலையில், ட்விட்டர் மட்டும் விதிமுறைகளை பின்பற்ற மறுத்துவந்தது.

சட்ட பாதுகாப்பை இழந்த ட்விட்டர்

எனவே, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) சட்டம், 2000 இன் பிரிவு 79 இன் கீழ், இடைத்தரகராக செயல்படும்போது பின்பற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து விலக்கு பெறும் தகுதியை ட்விட்டர் தற்போது டிவிட்டர் இழந்துவிட்டது. இது மேற்கூறிய விதிகளின் விதி 7 இன் கீழ் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் , சமூகவலைதளங்களுகான சட்டரீதியிலான பாதுகாப்பை இந்தியாவில் டுவிட்டர் நிறுவனம் இழந்துள்ளது. இந்த பாதுகாப்பை இழந்ததால், ‛இடைநிலை தளம்' (Intermediary Platform) என்ற பெயரையும் இழந்துவிட்டது. சட்டரீதியிலான பாதுகாப்பை இழந்த காரணத்தினால் டிவிட்டர் பயனாளர்களால் பதிவிடப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள், புகைப்படங்கள், வீடியோக்களுக்கு பயனர்கள் மட்டுமல்லாமல் இனி டுவிட்டர் நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும். மேலும் சட்டரீதியிலான நடவடிக்கைகளையும் டுவிட்டர் நிறுவனம் சந்திக்க நேரிடும்.