எல்லாம் இருந்தும் ஏதும் இல்லை!!..

எல்லாம் இருந்தும் ஏதும் இல்லை!!..

எல்லாம் இருந்தும் ஏதுவுமில்லை,  நான் வாழ நினைத்ததும் நடக்கவில்லை!

வாழ்க்கையில் பிடிப்பில்லை, நான் உயிர்வாழ அர்த்தமுமில்லை!

அவ்வாழ்க்கையில் நான் ஜெயிக்க நினைத்தும், தோல்விக்கு அதில் விருப்பமில்லை!

நான் வாழ நாட்கள் இருந்தும், அதில் நலன் சேர்க்கப் போக்கு இல்லை!

இருளில் நான் இருக்க, ஒளிக்கு வேலை இல்லை!

உருவமே மாண்டுபோக, நிழலுக்கு மதிப்பில்லை!

தோள் சாய எவருமில்லை, தோள் கொடுக்க பலர் இருந்தும்!

எவ்வழியிலும் போக விருப்பமில்லை, பல வழிகள் முன் இருந்தும்!

மகிழ்ச்சியில் நம்பிக்கை இல்லை, அதை அமைக்கும் திறன் படர்ந்து இருந்தும்!

நோக்கம் அறியாமல் நொந்துபோனேன், நாளை இருக்கும் என்பதையே மறந்து போனேன்!

ஏமாற்றத்தினால் ஏங்கினேன் ஏக்கங்களினால் நிரம்பினேன்,

போகப்போக மாறும் என்றேன் அக்கரைக்குப் போன பின்பும் !

வேறுமையையே நேசிக்கத் துணிந்தேன் அன்பின் மடியிலிருந்தபடியே!

அன்பை மட்டும் நேசிக்க இருதயமில்லை, உயிர் வாழ அதில் துடிப்பிருந்தும்.

அந்தப்படியே.,

முடிவில் ஒன்றை உணர்ந்தேன்

எண்ணம் போல் வாழ்க்கைவென்று, உன் செயல் போல் உன் வாழ்வு உண்டு என்று!

-சக்தி மீனாட்சி