தனிமையில் ஓர் இனிமைக் கண்டேன்!
இப்பேரண்டத்தில் நான் இருந்தும்,
என் அன்மையில் யவருமில்லை..
பார்போற்ற நான் வாழ்ந்தும் என்பேயரைச் சொல்ல யவருமில்லை..
வெரும் வார்த்தைகளால் நிரப்பபட்டு,
அன்பினால் வெருக்கப்பட்டு,
தனிமையால் சூழப்பட்டு,
வெறுமையால் ஆளப்பட்டேன்!
அத்தனிமையும் வெறுமையும் என்னை அண்டிக் கொண்டு,
என்னை ஆரத்தழுவியதால், அவற்றுக்கே அடிமையானேன்,
என்றும் என் தனிமையில் ஓர் இனிமைக் கண்டேன்!
அத்தனிமையில் நான் வாழ
நித்தம் ஓர் வழியும் நான் கண்டேன்!