பெண்ணுக்குள் கருவை வைத்த என் இறைவா!
அக்கருவுக்குள் என்னை வைத்தாய்!
தாய் கருவில் என்னைத் தெரிந்துகொண்டாய்!
என் கல்லறை வரை தொடர்ந்து வந்தாய்!
பேறு பெற்றேன் அப்பா! என்னைப் படைத்த நீரே-என் கரம் பிடித்ததானால்!
தொடக்கமும் முடிவும் ஆன நீரே-
என் இடைப்பட்ட காலத்தையும் சீரமைத்ததனால்!
அக்காலத்தை நான் எப்படி மறவேன் அப்பா!
என் மாமிசத்தினால் இழுக்கப்பட்டேன்
உம் கரத்தையே நெகிழ விட்டேன்
இச்சையால் நிரப்பப்பட்டு, பாவத்தினால் சூழப்பட்டேன் ;
அன்று நான் அறியேன்
இவையெல்லாம் மாயை என்று- இருப்பினும்
இவை அனைத்திலும் என்னோடுகூட இருந்தீர்
என்னை அழிவிலிருந்து மீட்பதற்கு
அம்மாயை எனக்குத் தந்த பரிசானது
என் அன்பினால் பிறந்த ஏமாற்றத்தையும்,
என் மீறுதல்களினால் இறந்த நம்பிக்கையையுமே
இவற்றினால் பெரும் நொறுகுண்ட என் இருதயம் என்னிடம் கூறியது.
இனி உனக்காக யாரும் இல்லை என்று'
அக்கணமே என் சோவியானது:
"உன் தந்தை நான் இருக்கிறேன்"
என்ற ஒலியைக் கேட்டது
அப்பொழுது என் நினைவிற்கு வந்தது
என் கரத்தைப் பிடித்தவர் கை விடுவாரோவேன்று!