நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளைப் படிக்கலாம்; யுஜிசி அறிவித்துள்ளது

விருப்பபட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க, அனைத்து கல்லுாரிகளும், பல்கலைகளும் அனுமதிக்க வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் திரு.தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கயில் கூறப்பட்டுள்ளதாவது

ஒரே நேரத்தில் மாணவக்ள் இரண்டு வகை பட்டப் படிப்புகளை படிப்பதற்கு அனுமதி அளிக்கும் வழிமுறைகளை, கடந்த ஆண்டு ஏப்ரலில் யு.ஜி.சி., வெளியிட்டது. இதன்படி கலை அறிவியல், பொறியியல் போன்ற அனைத்து வகை கல்லுாரிகளும், பல்கலைகழகங்களும் இந்த வழிமுறைகளின் படி, தங்களிடம் பயிலும் மாணவர்கள், ஒரே நேரத்தில் இரண்டு வகை படிப்புகளில் சேர அனுமதிக்க வேண்டும்.

ஆனால், ஒரு படிப்பில் சேர்ந்த பின், அதே காலகட்டத்தில் இன்னொரு படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம், அசல் மாற்று சான்றிதழ் மற்றும் இடமாற்று சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என, கல்லுாரிகளும், பல்கலைகளும் வலியுறுத்துவதால், மாணவர்கள் இரண்டாவது படிப்பில் சேர முடியவில்லை என, தெரிகிறது.அதனால் யு.ஜி.சி பின்வரும் அறிக்கையை வெளியிட்டு்ள்ளது.

அதன்படி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்க வகை செய்யும் வகையில், தங்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை அமைத்து, இரண்டு படிப்புக்கான வசதிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.