வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் கையிருப்பில் எவ்வளவு தொகை உள்ளது, கடைசிப் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொலைப்பேசி மூலம் அறிந்துகொள்ளும் வசதியை பொதுத்துறை வங்கியான SBI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இலவச எண் சேவையின் மூலம் கையிருப்பு குறித்த விபரத்தை அறிய உங்கள் அலைபேசி இணையவசதி கொண்ட அலைபேசியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இலவச எண் ( Toll Free number)
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ(State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. அந்த வகையில்,
எஸ்பிஐ (SBI Bank)1800 1234 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது,
இதில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வங்கி வசதிகளைப் பெறலாம்.
அனைத்து வேலைகளும் ஒரு எண்ணை அழைப்பதன் மூலம் செயல்படுத்தப்படும்.
SBI வங்கியின் இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம், உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடந்த கால பரிவர்த்தனை விவரங்களைப் உடனடியாக வீட்டிலிருந்தபடியே பெறலாம்.
அதாவது, இந்த ஒரு இலவச எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
இந்த அழைப்பு வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் அலைபேசியானது இணையதளவசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோனாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண இணையவசதி இல்லாத அலைபேசி மூலமாகவே இச்சேவையினை பெறலாம்
புதிய வசதி (New facility)
கொரோனா போன்று வைரஸ் தொற்று அதிகமாக பரவிவரும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக SBI வங்கி தனது டுவிட்டரி பதிவில் தெரிவித்துள்ளது.
"வாடிக்கையாளர்களே, வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற அடிப்படையில், உங்கள் உடனடி வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தொடர்பு இல்லாத சேவையை SBI வழங்குகிறது. எங்கள் இலவச எண்ணை 1800 1234க்கு அழைக்கவும்" என்று SBI வங்கி தனது Twitter பதிவில் தெரிவித்துள்ளது.
சேவைகள் (Services)
- எஸ்பிஐயின் இந்த இலவச எண் மூலம் உங்கள் வங்கி (SBI Bank) கணக்கு இருப்பைச் (Balance Enquiry) சரிபார்க்கலாம்.
- இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம், உங்களது வங்கி கணக்கில் மேற்கொண்ட கடைசி 5 பரிவர்த்தனைகள் (Last 5 Transactions) பற்றிய தகவல்களைப் பெறலாம்.
- இந்த இலவச எண்ணில் உங்கள் ஏடிஎம் கார்டை Block செய்யலாம்.
- இந்த எண்ணைத் தொடர்பு கொள்வதன் மூலம் பதிய ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த எண் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் ஏடிஎம் கார்டின் பாதுகாப்பு பின் எண்ணை (Pin Number) உருவாக்கலாம் மற்றும் மாற்றலாம்.
- இந்தக் கட்டணமில்லா எண்ணில் இருந்து உங்கள் புதிய ATM கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த வசதிகளை இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்வதன் மூலமாகவோ, அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவோ பெறலாம்.