Microsoft நிறுவனத்தின் புதிய தலைவரானார் சத்யநாதெள்ளா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்யா நாதெள்ளா (Satya Nadella) தற்போது அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் (Microsoft):

கடந்த 1975ம் ஆண்டில் துவக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட்(Microsoft) நிறுவனம் பயனர்கள் அனைவராலும் தலைசிறந்த நிறுவனமாக போற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விரைவில் தனது புதிய உருவாக்கமான Windows 11 Operating System-ஐ அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் புதிய குழு தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மூன்றாவது தலைமை செயல் அதிகாரி இருந்து வருகிறார் சத்ய நாதெள்ளா. இப்போது மூன்றாவது தலைவராகவும் செயல்பட இருக்கிறார்.

தலைவரானார் சத்யா நாதெள்ளா (Satya Nadella)

இதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஜான் தாம்சன் மற்றும் பில்கேட்ஸ் ஆகிய இருவர் மட்டுமே தலைவர் பதவியில் வகித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் வரிசையில் சத்யா நாதெள்ளா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்ய நாதெள்ளா , ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தேச் சேர்ந்தவர். மங்களூரில் படித்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் ஆவார்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொழிலில் உள்ள அச்சுறுத்தல்களை கண்டுபிடித்தும், தனக்கு உள்ள புரிதல் மூலம் சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி, நிறுவனத்தை மிக உயரத்திற்கு எடுத்து செல்ல ஆலோசனைகளை நாதெல்லா வழங்குவார் . தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சத்ய நாதெல்லா முக்கிய பங்கு வகித்து உள்ளார் எனக்கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சத்ய நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். சத்யா நாதெள்ளா சி.இ.ஓ ஆக பதவி ஏற்ற காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து வகையிலும் கடும் சரிவை கண்டு வந்தது.

சிறப்பான தலைமை

அவரது சிறப்பான தலைமை காரணமாக தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் தற்போது சுமார் 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சி.இ.ஓ ஆக பதவி ஏற்ற பிறகு லிங்க்ட்இன் (LinkedIn), நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (Nuance Communications) மற்றும் ஜெனிமேக்ஸ் ( ZeniMax) போன்ற பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனகங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நிறுவனத்தில் வணிகத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

53 வயதான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 29 ஆண்டு காலமாக இருந்துள்ள சத்யாவின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு எப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் காரணமோ, அதேபோல மைக்ரோசாப்ட்டின் வளர்ச்சிக்கு சத்யாவும் ஒரு முக்கியக் காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.