குமரி கண்டமும் முச்சங்க வரலாறும்- - பாகம் 1

தமிழர் என்பவர் யார்?

முச்சங்கங்களை ஏற்றுக்கொள்பவர்களே, நம்புபவர்களே அடிப்படைத் தமிழர். தமிழர் என்போர் முச்சங்க மரபினர். ஆதலால், நாம் நம் இளம் தலைமுறையினரிடம் முச்சங்கம் பற்றிய உண்மைகளை எடுத்துரைப்பது நம் தலையாயக்கடமை.

முச்சங்கம் கூறிய அறம், பொருள், இன்பம், வீடு எனும் தமிழருக்கான நான்(நன்)மறைகளைக் கற்று, உணர்ந்து வாழ்பவர்களே உண்மையான தமிழர்கள்.

முச்சங்கங்கள் பற்றிய சான்றுகளை கேட்போர் பலர். அவ்வாறான சான்றுகளுக்கு அதிகமான பொருட்செலவு தேவை, நமது அமைப்பு அதை செய்யும் அளவிற்கு தற்போது இல்லை. எதிர்காலத்தில் அதற்கான ஆய்வுகள் கண்டிப்பாக முன்னெடுக்கப்படும்.

இருப்பினும் நம்மிடம் உள்ள இலக்கிய நூல்கள் குமரி கண்டத்தைப் பற்றியும், முச்சங்கங்களைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் பக்ருளி ஆற்றை பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன. இறையனார் அகப்பொருள் என்ற நூலிலும் முச்சங்கங்களைப் பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன.

தமிழர்கள் என்பவர்கள் மெய்யறிவை தேடுபவர்கள், உடல் மற்றும் உயிரைப் பற்றிய மிக நுட்பமான ஆராய்ச்சிகளை செய்பவர்கள், தமிழ்மொழிக்கு மட்டுமின்றி மனித வாழ்விற்கே இலக்கணம் வகுத்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக தொல்காப்பிய பொருளதிகாரம் விளங்குறது.

குமரிக்கண்டம்

நம் தெய்வப்புலவர் வள்ளுவனார், இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில்

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்தென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை."

எனக்கூறுகிறார். அதாவது, இக்குறளில் ஐந்து கடமைகளைப் பற்றி தெய்வப்புலவர் குறிப்பிடுகிறார். தென்புலத்தார்க்கு மரியாதைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். தென்புலத்தார் என்று அவர் குறிப்பிடுவது தெற்கில் வாழ்ந்தவர்கள், அதாவது நம் முன்னேர்கள், குமரிக்கண்டத்தில் வாழ்ந்தோர். அவர்களுக்கு மரியாதைச் செய்தல் இல்வாழ்க்கையில் தலையாயது என தெய்வப்புலவர் குறிப்பிடுகிறார்.

தெற்கில் ஒரு மிகப்பெரிய கண்டம் இருந்தது, அந்தக்கண்டம் தொடர்க்கண்டமாக அமையாமல், சிறுசிறு தீவுகளாக பரந்து விரிந்து இருந்தது. அதாவது தற்போதைய ஆப்பிரிக்க கண்டத்தின் மதகாட்கர் தீவுக்கும், ஆட்திரேலிய தீவுக்கும் இடையில், நமது இந்திய பெருங்கடலிற்கு உள்ளாக தற்போதைய கன்னியாகுமரிகக்கு தெற்கே மிகப்பெரிய முக்கோண வடிவில், மிகப்பெரிய நிலப்பரப்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்துள்ளது. இங்குதான் நம் மனித இனம் முதன்முதலில் தோன்தியது. இங்குதான் நம் தமிழ்மொழியும் தோன்றியது.

எழுத்து /கருத்துகள்: தமிழ் கலாச்சார ஆய்வு முகநூல் பக்கம்