ஜீலை 25-ல் ஒரு மிகப்பெரிய குறுங்கோள் பூமியை நோக்கி வருகிறது

2008 GO20 எனப் பெயரிடப்பட்ட குறுங்கோள் 2008-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி அன்று பூமிக்கு அருகில் வந்து சென்றது. மேலும், இது ஜூலை 25, 2034 இல் மீண்டும் பறந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மிகப் பெரிய குறுங்கோள் 2014-ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை 3 மணியளவில் நமது பூமி கிரகத்தைக் கடந்து பாதுகாப்பாக செல்லப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ 2008 GO20’ என்று பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள். பூமிக்கு அருகிலுள்ள ஒரு குறுங்கோள் ஆகும். அதனுடைய நீளம் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக இருக்கும் அதாவது சுமார் 200 மீட்டர் ஆகும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் கணக்கீட்டின்படி, இது பூமியை வினாடிக்கு 8.2 கி.மீ வேகத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இக்குறுங்கோள் பூமியிலிருந்து 3 முதல் 4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைவிட கிட்டத்தட்ட எட்டு முதல் ஒன்பது மடங்கு தூரம் ஆகும்.


ஒரு அபாயகரமான குறுங்கோள் (PHA)

7.5 மில்லியன் கி.மீ தூரம் அல்லது 0.05 வானியல் அலகுகளுக்குக் கீழே பறக்கும் பூமிக்கு அருகிலுள்ள குறுங்கோள்கள் அபாயகரமான குறுங்கோள்கள் என அழைக்கப்படுகின்றன. 2008 GO20 குறுங்கோள் 0.02 வானியல் அலகு முதல் 0.03 வானியல் அலகு தொலைவில் பறக்கும் குறுங்கோள் என்பதால், இக்குறுங்கோள் ஒரு அபாயகரமான குறுங்கோள் (PHA) ஆகும். ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் அல்லது சுமார் 150 மில்லியன் கி.மீ ஆகும்.