+2 மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கலாமா?

தற்போதைய நிலையில் இந்தியாவில் கலை, அறிவியல் படிப்புகள் படித்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆகவே மாணவர்களுக்கு கலை, அறிவியல் படிப்புகளில் (Arts and Science Courses) சேர ஆர்வம் அதிகரித்து வருகிறது.

நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, சராசரி மற்றும் சராசரிக்கும் குறைவாக படிக்கும் திறன் பெற்ற மாணவர்கள் என அனைவருக்கும், கலை, அறிவியல் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன.

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ.

பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கு நிகராக கலை, அறிவியல் படிப்புகளுக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., என்ற பிரிவுகளில், 80க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மாணவர்கள் தங்களின் தனித்திறன்கள், விருப்பத்திற்கேற்ற எந்த வகையான படிப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்

கலை அறிவியல் படிப்புகளில் சில

பி.ஏ., பி.எஸ்.சி. பி.காம்.
ஆங்கிலம் கணிதம் பி.காம்., சி.ஏ
தமிழ் இயற்பியல் பி.காம் சி.எஸ்
வரலாறு எலக்ட்ரானிக்ஸ் ஐ.பி.எம்
அரசியல் அறிவியல் வேதியியல் பி.பி.ஏ
சமூகவியல் ஐ.டி
பொருளாதாரம் கம்ப்யூட்டர் சயின்ஸ்
பொது நிர்வாகம் எலக்ட்ரானிக் மீடியா
சுற்றுலாத்துறை நியூட்ரிஷன்
இதழியல் பேஷன் டிசைனிங்
அயல் மொழிகள் விஷுவல் கம்யூனிகேஷன்
அனிமேஷன்
சைக்காலஜி
புள்ளியியல்
பயோ-டெக்னாலஜி

மேற்கண்ட படிப்புகள் மட்டுமன்றி இன்னும் ஏராளமான இளநிலை படிப்புகள் கலை அறிவியல் பிரிவில் உள்ளன.

மாணவர்கள் தங்கள் ஆர்வத்துக்கும் திறமாக்கும் ஏற்ப எந்த துறையையும் தேர்வு செய்யலாம். அறிவியல் படித்த மாணவர்கள், வணிகவியல் துறையில் ஒரு சில படிப்புகளை தவிர, பிற படிப்புகளில் சேரலாம். கலை பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் அறிவியல் பிரிவில் சேர இயலாது. ஆனால், ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற, பல வேலை வாய்ப்புகள் தற்போது கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

தொழில்நிறுவனங்கள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், விற்பனை நிலையங்கள், வணிக தளங்கள் என, பலவகையான நிறுவன அமைப்புகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. எந்த துறையை தேர்வு செய்தாலும், மாணவர்கள் கட்டாயம் தங்களின் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.

புதிய பாடப்பிரிவுகள்

தற்போது, பி.எஸ்.சி., ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial Intelligence), சைபர் செக்யூரிட்டி(Cyber Security) , டேட்டா சயின்ஸ் (Data Science), பாரன்சிக் சயின்ஸ், ஆக்மென்ட் ரியாலிட்டி (Augmented Reality ), விருச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality), கிராபிக் டிசைனிங் உள்ளிட்ட புதிய படிப்புகள் பல்வேறு கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள தொழில்நுட்பமாற்றங்களுக்கு ஏற்ப, இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே புதிய தொழில்நுட்பங்களில் தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இத்தகைய படிப்புகள் சிறந்த தேர்வாக அமையும்.

மாணவர்கள் சேர்க்கை

தற்போதைய கோவிட் சூழலை கருத்தில்கொண்டு, கல்லுாரிகளின் இணையதளத்தை பார்த்து எந்தவகையான பாடப்பிரிவுகள் அந்தக்கல்லூரியில் உள்ளன, அதற்கான கல்வித்தகுதி என்ன, மற்றும் அதற்கான கட்டண விபரங்களை அறிந்துகொண்டு தற்போது ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வழியாக பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இளநிலை சேரும் மாணவர்கள், மேற்கொண்டு உயர்கல்வி படிக்கவேண்டுமா, வேலைக்கு செல்லவேண்டுமா, தொழில் துவங்கவேண்டுமா என்பதை திட்டமிட்டு அதற்கேற்ப துறைகளை கல்லூர்களை தேர்வு செய்வது நல்லது.

எதிர்காலத்தில், மாணவர்களின் தனித்திறன் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டு, வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை நினைவில் வைத்து, கிடைக்கும் நேரத்தில் சான்றிதழ் படிப்புகள் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்), திறன் மேம்பாடு பயிற்சிகளில் வாயிலாக தங்களது தனித்திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் கட்டாயமானதாகும்.