சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஆயிவின் முடிவில் கேல்வனைஸ்டு ஸ்டீல் பயன்படுத்தப்பட்ட கார்கள் அதிக செயல்திறன் கொண்டதாகவும், எளிதில் துருபிடிக்காத தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கேல்வனைஸ்டு ஸ்டீல் என்றால் என்ன?
இரும்புதகடுகளை எடுத்து அதனை உயர்வெப்பநிலைக்கு உட்படுத்தி திரவ வடிவிலுள்ள துத்தநாகத்தில் மூழ்கச்செய்து எடுக்கப்படுவதே கேல்வனைஸ்டு ஸ்டீல் ஆகும்.
மாறாத இரும்பின் குணம்
இது பல சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டாலும் மாறாத இரும்பின் தன்மையினை பெற்றுள்ளது. உதாரணமாக, இரும்பின் உறுதி மற்றும் காந்தத்தன்மையை கொண்டுள்ளது.
பயன்கள்
சில கார்கள் தயாரிப்பு நிறுவனங்களில் இரும்புத்தகடுகளுக்கு மாற்றாக கேல்வனைஸ்டு ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது.
இரும்பின் மீது மேல்பூச்சாக பயன்படுத்தும்போது அந்த இரும்பும் எளிதில் துருபிடிக்காத தன்மையை பெறுகிறது.
தகடின் எடை குறைவதால் வாகன செயல்திறன் அதிகரிக்கிறது.
இந்த வகை கார்களை பயன்படுத்துவதால் 6 வருடத்திற்கு காரின் பாராமரிப்பு செலவு 50% குறைவதாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.