S Plaid+ மாடல் காரை உற்பத்தியை கைவிட்ட எலன் மஸ்க்

உலகிலேயே மிக அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

S Plaid+ மாடல் கார்

டெஸ்லா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதிக திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய மின்சார கார்கள் உலகின் பிரபலமாக உள்ளன. இந்நிலையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிறுவனம் அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்தS Plaid+ மாடல்காரை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்திருந்தது. இவ்வகை காரில் முழுமையாக சார்ஜ் செய்தால்643 கிமீதூரம் வரை பயணிக்கலாம் எனவும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனால், உலக அளவில், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால் அதிகப்படியான கொரோனா பரவவல் காரணமாக,S Plaid+ மாடல்காரின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த்து. இந்நிலையில்டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், S Plaid+ மாடல் கார் உற்பத்தி செய்யும் திட்டம் கைவிடப்படுவதாகஅறிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்படும் கார்கள் சிறப்பாக இயங்கும் காரணத்தால், அதை மேம்படுத்தும் முடிவை கைவிடுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.