Mobile திருட்டுகளை தடுக்க புதிய வழியை பயன்படுத்தும் டெல்லி போலீசார்

Mobile திருட்டுகளை தடுக்க புதிய வழியை பயன்படுத்தும் டெல்லி போலீசார்

DoT மற்றும் டெல்லி போலீசார் இணைந்து Central Equipment Identity Register என்கிற திட்டத்தை டெல்லியில் தொடங்கி உள்ளனர். இது மொபைல் திருட்டுகளை குறைப்பதற்கான ஒரு அட்டகாசமான திட்டமாகும். இது எவ்வாறு வேலை செய்யும், இதனால் என்ன பயன் என்கிற முழு விவரங்களை இங்கு காணலாம்.

Department of Telecommunications - DoT மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து Central Equipment Identity Register (மத்திய அடையாள பதிவு கருவி ) என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளன.

இந்த கருவிமூலம் திருடப்பட்ட மின்னணு சாதனங்களின் IEMI எண்களைக் எளிதாக கண்டுபிடிப்பதற்கும், அவற்றை தடுப்பதற்கும், அவற்றை பற்றி தொலைதொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (டிஎஸ்பி) புகாரளிப்பதற்கும் அதிகாரிகளுக்கு மிகவும் உதவும்.

பி.டி.ஐ அறிக்கையின்படி, தற்போது மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த CEIR புதிய திட்டத்தின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மொபைல் திருட்டு வழக்குகளில் விரைவான நடவடிக்கைகளை எடுக்க முடியும் மேலும் திருடப்பட்ட சாதனங்கள் குறித்து தொலைதொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (டிஎஸ்பி) உடனடியாக அறிவிக்கவும் உதவும், இதன் வழியாக திருடப்பட்ட மொபைலில் டெலிகாம் சேவைகள் உடனடியாக முடக்கப்படும்.