சும்மா தள்ளிதான் வைத்தார்... தடாலடியாக விழுந்த Coca-Cola !

இது விளம்பர காலம். விளம்பரத்தால் மட்டுமே பல மட்டமான பொருள்கள். விலை மலிவான பொருள்கள், அதிக விலைக்கு அமோகமாக விற்பனையாகின்றன. இதற்கு கொக்கோகோலா மிகச்சிறந்த உதாரணம். இந்த குளிர் பானத்தில் எந்த சிறப்பம்சமும் இல்லை. உலகம் முழுக்க வி.ஐ.பி.க்களின் விளம்பரத்தால் மட்டுமே முன்னணி குளிர்பானமாக விற்பனையாகிவருகிறது. கொக்கோகோலாவைப் புறக்கணிக்க நாம் எத்தனையோ போராட்டங்களை நடத்திலும் முழுமையாக விரட்ட முடியவில்லை.

Coca-Cola

இந்த கொக்கொகோலாவின் விற்பனையை தனது ஒரேயொரு செய்கையால் தடாலடியாக வீழ்த்தியுள்ளார்.

கால்பந்தின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ! யூரோ கோப்பை கால்பந்துப் போட்டிகளில் போர்ச்சுகல் அணியின் ஆட்டத்துக்கு முந்தைய பிரஸ்மீட்டில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டார்.

அப்போது அவருக்கு முன்பிருந்த மேஜையின் வலதுபுறத்தில் இரண்டு கொக்கோகோலா பாட்டில்களும், ஒரு பாட்டிலில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. கொக்கோகோலாவை விளம்பரப்படுத்துவதற்காகவே இப்படி வைத்திருந்தார்கள்.

ரொனால்டோ வந்து அமர்ந்த அடுத்த நிமிடமே அந்த இரண்டு கொக்கோகோலா பாட்டில்களையும் குறுகுறுவெனப் பார்த்தார். கையால் எடுத்து, வலதுபுறத்திலிருந்து இடதுபுறத்துக்கு, தனது கையால் எவ்வளவு தூரத்துக்குத் தள்ளி, வீடியோ கவரேஜுக்கும் அப்பால் வைக்கமுடியுமோ, அவ்வளவு தள்ளிவைத்தார். அதைப் பார்க்கும்போதே கொக்கோகோலா பானத்தின்மீது அவரது வெறுப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.

மனிதர் அதோடு நிறுத்தாமல், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, "“"Agua!" என்று ஒரு வார்த்தையை உச்சரித்ததன்மூலம் தண்ணீரைக் குடிங்க என்று அறிவுரை கூறினார்.இரண்டு பாட்டிலை நகர்த்திவைத்து, ஒரேயொரு வார்த்தை பேசினார்.

தலாடியாக விழுந்த Coca-Cola

அவ்வளவுதான்! உலகம் முழுதுமுள்ள ரொனால்டோவின் கால்பந்து ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாகப் பரப்ப, அடுத்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் கொக்கோகோலாவின் பங்கு மதிப்பு, 56.10 டாலரிலிருந்து 55.22 டாலராகக் குறைந்ததன்மூலம், இதன் பங்குச்சந்தை மதிப்பில், 4 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 29 ஆயிரம் கோடி ரூபாயாகும்!

அன்று நடந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை போர்ச்சுக்கல் வென்றது.

மூன்று கோல்கள் அடித்த ரொனால்டோ

அதில் இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்திருந்தார். அவரது இரண்டு கோல்களைவிட இந்த இரண்டு பாட்டில்களைத் தள்ளிவைத்தது மூலம் அடித்த மூன்றாவது கோல்தான் பலமான கிக்காக அமைந்தது