Signal செயலியின் தலைமை செயல் அதிகாரியாகிரார் WhatsApp நிறுவனர்

சிக்னல் (Signal Application) செயலியின் நிறுவனர்களின் ஒருவரான மாக்ஸி மார்லின்ஸ்பைக் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக சிக்னலின் வலைப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சிக்னல் செயலியைப் நாம்  ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்போம். 

பயனர்களின் தகவல்களை எதையும் வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தாத வாட்ஸ்அப்புக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு செயலி. 

அச்செயலியின்  நிறுவனர்தான் தற்போது தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியிருக்கிறார். 

அதன் நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வரும் பிரையன் ஆக்டன் என்பவர் புதிய தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமிக்கும் வரை  அச்செயலியின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார். 

பிரையன் ஆக்டன் என்பவர், வாட்ஸ்அப்(WhatsApp) நிறுவனத்தின் துணை-நிறுவனர்களுள் ஒருவர் ஆவார். 

தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் வசம்  இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை, பிரையன் ஆக்டன் மற்றும் ஜான் கௌன் ஆகிய இருவர்தான் 2009-ல்  உருவாக்கினர். 

இவர்கள் இருவரும் முன்னாள் யாஹூ நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆவர். 

இவர்களிடம் இருந்து வாட்ஸ்அப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு 2014-ல் வாங்கியது ஃபேஸ்புக் (தற்போதைய மெட்டா) நிறுவனம். 

 ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக கையாளும் விதத்தில் பிரையனுக்கு உடன்பாடு இல்லை. 

 எனவே, 2017-ல் வாட்ஸ்அப் நிறுவனத்தை விட்டு வெளியேறி தற்போதைய சிக்னல் செயலியின் நிறுவனர்களுள் ஒருவரான மாக்ஸியுடன் இணைந்து 'சிக்னல் டெக்னாலஜி ஃபவுண்டேஷனை' எனும் அமைப்பை உருவாக்கினார் பிரையன். 

வணிக நோக்கமில்லாத ஒரு நிறுவனமாகவே  இந்த நிறுவனத்தை இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். 

சிக்னல் ஜெயலியின் தற்போதைய செயல்பாடுகளை  இந்த ஃபவுண்டேஷன்தான்  கவனித்து வருகிறது.

சிக்னல் ஒரு Open-Source செயலி

அப்படியென்றால், அதன் சோர்ஸ் கோடை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

எந்தவெரு ஒரு தனிமனிதருக்கும் அவர்களின் தனியுரிமை என்பது மிகவும் முக்கியத்துவமானது ஒன்று என்பதில் உறுதியாக இருப்பவர் இதன் நிறுவனர்களின் ஒருவரான பிரையன். 

எனவே,இவர்  வணிக நோக்கமில்லாத ஒரு சேவையான சிக்னல் சேவையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 

வணிக நோக்கம் இல்லை என்பதால், பயனர்களின் தரவுகளை பயன்படுத்த தேவை இல்லை. 

எனவே பயனர்கள் அனைவரும் முழு நம்பகத்தன்மையுடன் சிக்னல் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்பதே சிக்னல் நிறுவனர்களின் நோக்கமாக இருக்கிறது.