செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence ) - ஒர் முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்பது மிக நீண்ட கணினி நிரல்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும், இது நம்மை சுற்றியுள்ள உலகத்தை (இயற்கை மற்றும் அனைத்து வகையான பொருட்களையும்) உணர்கிறது, தனக்கென திட்டங்களை உருவாக்குகிறது, இலக்குகளை அடைகிறது, மற்றும் சொந்தமாக முடிவுகளை எடுக்கிறது.

செயற்கை நுண்ணறிவு – Artificial intelligence

கணிதம் (Mathematics), தர்க்கம் (Logic), நிகழ்தகவு (Probability), மொழியியல் (Linguistics), நரம்பியல் (neuroscience) மற்றும் முடிவுக் கோட்பாட்டை(Decision Making) ஒன்றாகப் பயன்படுத்தும்போது நமக்கு கிடைக்கும் அதிசயம் இந்த செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம்.

AI இன் கீழ் –Machine Learning (இயந்திரக் கற்றல்), Deep Learning (ஆழமான கற்றல்) என பல பிரிவுகள் வருகிறன்றன.

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், இது சிறந்த கணினி தொழில்நுட்பம். கணினிகளை நம் மனித மூளையைப் போல சிந்திக்கவும் செயல்படவும் செய்யும் நுட்பம். கணினி நம்மைப் போலவே சிந்திக்கும், பொதுவாக மனித நுண்ணறிவை சாத்தியமான இடங்களில் பயன்படுத்துகிறது, மேலும் சிந்தித்து சரியான முடிவுகளை வழங்கும்.

கண்ணோட்டம் (Overview), பேச்சு புரிதல் (speech recognition), சிக்கலைத் தீர்ப்பது (problem-solving), மொழிபெயர்ப்பு (translation), தணிக்கை (audit) செய்வதற்கான செயல்பாடு, அனைத்தையும் AI உதவியுடன் செய்ய முடியும். நம் கணினிகள் மூலம் AI-க்கு இணக்கமான கார்களின்(AI Compatible Cars) இயந்திரம் மற்றும் ஓட்டத்தை நாம் கட்டுப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக

நமது பால் குக்கரில் பால் காய்ந்தால் , அது கூவி, நம்மை கூப்பிட்டு சொல்கிறது போல., தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா வளாகத்தை கண்காணிக்கும்போது, ஏதேனும் தவறு நடந்தால் கணினி நமக்கு தெரிவிக்கும்.( கடை மூடிய பிறகும் ஆள் நடமாட்டம் இருப்பின்)

இதற்கான விதிகளை முதலில் பதிவு செய்து விட்டால் போதும்.

பிறகு ஏதேனும் தவறு நடைபெற்றால், AI நம்மை Alert செய்யும்.

AI சிறந்த சரியான முடிவு எடுக்க நமக்கு உதவும்.

அதற்கென்று ஒரு அறிவு இல்லை. ஆனால் அதற்கான அறிவை எதிர்காலத்தில் தானாகவே உருவாக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

மருத்துவ துறையிலும், உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் இதன் சாத்தியக்கூறுகள் மிக பிரம்மாண்டமாக உள்ளன.

போட்ஸ் (Bots)

இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு வலைத்தளத்திலும், ஒரு ‘அரட்டை’ உள்ளது. 2000 க்கு முன்பு, உண்மையான மனிதர்கள் இதைக் கையாண்டனர். எஸ்பிஐ / ஐசிஐசிஐ போன்ற ஒரு வங்கியை கற்பனை செய்து பாருங்கள், இதுபோன்ற சில கோரிக்கைகளை சில நிமிடங்களில் அவர்கள் பெறுவார்கள். இந்த அதிக அளவிலான அரட்டைகளை மனிதனால் எடுத்து செயல்படுத்த இயலவில்லை. எனவே இன்று, அந்த அரட்டைகள் அனைத்தும் தற்போது இந்த ‘போட்ஸ் (Bots)’ தொழில்நுட்பத்தால் கையாளப்படுகின்றன.

அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவியாளர்கள் (Voice assistants) ஆகியவை AI தொழில்நுட்பத்தின் சிறிய அறிமுகம் மட்டுமே.

அமெரிக்காவில், பங்குச் சந்தை நாஸ்டாக் (Nasdaq ), AI மற்றும் ஆழமான கற்றலைப் (Deep Learning) பயன்படுத்தி அத்திமீறல்கள் மற்றும் மூலோபாயத்தைக் கண்டறிகிறது (Anomalies and Investment Strategy).

இதன் மூலம் மிக விரைவில் ‘பங்கு தரகர் (Stock Brokers)’ என்பது நம் சார்பாக பங்கு வாங்கவும் விற்கவும் தானே முடிவு செய்யும் எளிய App களாக தான் இருக்கும். Fund Manager என்போர் இந்த இயந்திரத்துக்கு உள்ளீடுகளை அளிப்பவராக மட்டுமே இருப்பர்.

AI-ஐ அதிகமாகப் பயன்படுத்தும் மற்றொரு துறை போக்குவரத்து. அதாவது ஓட்டுநர் இல்லாத வாகனங்கள். இதன்மூலம் ஓட்டுநரின் உதவியில்லாமல் வாகனங்கள் தன்னிச்சையாக இயங்கும்.