மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது

தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் மருத்துக்கல்விப் போன்று, கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துவகை உயர்கல்விப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நம் நாட்டில் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக 2021-22-ஆம் ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு ஜீன் மாதம் நடைபெறும் என மத்திய கல்வியமைச்சகம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததின் காரணமாக நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழுவான யூ.ஜி.சி. அறிவித்துள்ளது.