இன்று அனைத்துவிதமான தேவைகளுக்கும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது.
இதனால் கணினி பயன்பாடுகளின் தேவை அதிகம் கொண்டவர்கள் மற்றும் கணினியில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அவர்களின் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில சிறிய சிறந்த வழிகள் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.
முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள்/பயன்படுத்துபவர்கள் அவர்களின் கண்களிள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கணிணிக்கு மிக அருகில் அமர்ந்து கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை பார்ப்பதால், இரு கண்களும் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
இதனால் 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது மிகவும் சிறந்தது.
அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாத வழிமுறையாகும்.
இவ்வாறன நேரம் வாய்க்கபெறாதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்கள் தங்களின் உள்ளங்கைகளை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடம் ஒய்வு கொடுக்கலாம்.
இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லதும் அவசியமானதுமாகும்.
கணினியின் முன் அமர்ந்து தட்டச்சு (டைப்) செய்யும் போது உடலை நேராக வைத்து அமர்வது மிக அவசியமான ஒன்று.
அதாவது நிமிர்ந்து அமர்ந்து வேலை செய்வது நல்லது.
இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும்.
இதனால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.
தரை மீது சமமாக இருக்குமாறு பாதங்களை வைத்திருப்பது இன்னும் சிறந்தது.
உடலின் பலம் அனைத்தும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமமாக தரையில் வைத்து கொள்ளும்போது உடல் இயக்கம் சீராக இருக்கும்.
இதனால் உடல்வலியை தவிர்க்கலாம்.
தட்டச்சு (டைப்) செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறந்த உதவி மற்றும் பலமாக சப்போர்ட் இருக்கும்.
இதனால் சரியான முறையில் அமர்ந்து வேகமாகவும் தட்டச்சு (டைப்) செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக தடுக்க முடியும்.
கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை தேவாயான அளவிற்கு குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமானது.
இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.
இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் சிறிய மற்றும் எளிய வழிகள் தான்.
இருப்பினும் மேலே கூறிய சிறந்த சிறிய வழிமுறைகளை பின்பற்றுவதால் நம் உடலை நல்லமுறையில் பாதுகாக்க முடியும்.